OOSAI RADIO

Post

Share this post

வரலாறு காணாத வகையில் உயர்ந்த தங்கத்தின் விலை!

உலக சந்தையில் தங்கத்தின் விலை தற்போது வரலாறு காணாத வகையில் உயர்வைக் காட்டி வருகிறது.

நேற்று (05) 24 கரட் தங்கம் அவுன்ஸ் ஒன்று இதுவரை பதிவாகாத அதிகூடிய விலையாக 2,141.59 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

பின்னர் அந்த விலை 2,130 டொலராக நிர்ணயிக்கப்பட்டது.

கடந்த 30 நாட்களாக தங்கத்தின் விலை சுமார் 100 டொலர்கள் வரை அதிகரித்துள்ளது.

கடந்த 06 மாதங்களுடன் ஒப்பிடம் போது , ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 200 டொலர்களுக்கு மேல் அதிகரித்துள்ளது.

ஓராண்டன் ஒப்பிடும் போது , ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை சுமார் 315 டொர்கள் அதிகரித்துள்ளது.

குறிப்பாக புவிசார் அரசியல் தீவிரநிலை தங்கத்தின் விலையில் இந்த வியத்தகு உயர்வுக்கு பங்களித்துள்ளது.

உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் இந்த வகையான ஏற்ற இறக்கம் இருக்கும்போது தங்கத்தை சேமித்து வைக்க எதிர்பார்கின்றன.

மேலும், ஆசிய சந்தைகளில் தங்கப் பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளமையும் தங்கம் விலை உயர்வுக்கு காரணமாகும்.

அமெரிக்க பெடரல் ரிசர்வ் அல்லது மத்திய வங்கியின் வட்டி விகிதம், தங்கத்தின் விலையை உயர் மட்டத்தில் பராமரிக்க ஒரு முக்கிய காரணியாகும்

இந்த ஆண்டு அமெரிக்க வட்டி விகிதங்கள் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதால் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 2,300 டொலராக உயரும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

Leave a comment

Type and hit enter