குறைக்கப்பட்ட சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள்!
நான்கு வகையான அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லங்கா சதொச ஊடாக இந்த விலை குறைப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.
நேற்று (08) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சதொச பால் மா, காய்ந்த மிளகாய், பச்சரிசி மற்றும் வெள்ளை சீனி ஆகியவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.
சதொச பால் மாவின் விலை 125 ரூபா விலை குறைக்கப்பட்டு 935 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
காய்ந்த மிளகாய் விலை 15 ரூபா குறைக்கப்பட்டு 1,175 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
பச்சரிசியின் விலை 5 ரூபா குறைக்கப்பட்டு 195 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
மேலும் வெள்ளை சீனி விலை 3 ரூபா குறைக்கப்பட்டு 272 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.