OOSAI RADIO

Post

Share this post

காதலியின் பெயரை எங்கு Tattoo போட்டுள்ளார் தெரியுமா?

காதலியின் பெயரை, அவரது கையெழுத்தாக கீழ் உதட்டில் பச்சைக் குத்தியுள்ள இளைஞர் ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

உலகம் முழுவதுமாக காதலர்கள், தங்கள் காதலை வெளிப்படுத்துவதற்காக பல்வேறு வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

அந்த வகையில் தற்போதைய ட்ரெண்டிங்காக டாட்டூ குத்துதல் இருந்து வருகிறது. ’பச்சை குத்துதல்’ என்று பழங்காலத்தில் இருந்து வந்த இந்த முறை, தற்போது டாட்டூவாக பரிணமித்திருக்கிறது. 

டாட்டூ குத்துவதற்கு என்று சிறப்பு பயிற்சி பெற்ற நபர்கள் உலகம் முழுவதும் வித்தியாசமான டாட்டூகளை உடலில் பச்சை குத்தி வருகின்றனர்.

அந்த வகையில் தனது காதலை வெளிப்படுத்தும் விதமாக, காதலர் ஒருவர் தனது உதட்டில் டாட்டூ வரைந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

’அம்ருதா’ என்ற தனது காதலியின் பெயரை அந்த நபர் டாட்டூ குத்த தேர்ந்தெடுத்த இடம் தான் இந்த பதிவு வைரலாக மாறுவதற்கு காரணமாக மாறி உள்ளது. 

பொதுவாக காதலியின் பெயரை கைகள், நெஞ்சு பகுதி, முதுகு கழுத்து என பல்வேறு இடங்களிலும் குத்துவது வாடிக்கை. ஆனால் அந்த நபர் தனது காதலி அம்ருதாவின் பெயரை தனது கீழ் உதட்டில் பச்சை குத்தியுள்ளார்.

டாட்டூ ஆர்டிஸ்ட் அபிஷேக் சப்கல் என்பவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். 

தற்போது இதனை அதிகளவில் பகிர்ந்து இணையதள வாசிகள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

இந்த வீடியோவை இதுவரை 69 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். இந்த வீடியோவிற்கு கருத்து தெரிவிக்கும் பலரும், என்னதான் இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர் தான் என்ற ரீதியிலேயே பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Type and hit enter