அடுப்பே இல்லாமல் இட்லி செய்யலாம்!

நடிகை நயன்தாராவின் அன்னபூரணி திரைப்படத்தின் மூலம் No Boil No Oil என்ற உணவு வகைகள் பிரபலமடைந்து வருகிறது.
இது மிகவும் சத்தாகவும் தயார் செய்வதற்கு இலகுவாகவும் இருப்பதாக பலரும் தெரிவித்து இதை வீட்டில் முயற்சித்து பார்க்கின்றார்கள்.
எப்போதும் காலை உணவு என்றால் இட்லி தோசை இல்லாமல் இருக்காது. இட்லி செய்வதற்கு முக்கியமாக உழுந்து மற்றும் அரிசி மா சேர்த்து அரைத்து வைத்து, பின் புளிக்க வைத்து மறுநாள் தான் செய்ய முடியும்.
ஆனால் No Boil No Oil என்ற உணவு வகை மூலம் அடுப்பு இல்லாமல் சத்தாகவும் சுவையாகவும் இட்லி செய்யலாம். அது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் – தேங்காய், எலுமிச்சை, உப்பு, அவல், தயிர்
செய்முறை
முதலில் ஒரு மிக்ஸியில் தேங்காயை சிறிய துண்டுகளாக வெட்டி தண்ணீர் ஊற்றி அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் அதை வடிக்கட்டி முதல் பாலில் மட்டும் எலுமிச்சை சாறு சேர்த்து 3 நிமிடங்களுக்கு கைவிடாமல் கிளறி ஒரு நாள் இரவு குளிரூட்டியில் வைக்கவும்.
அடுத்து மிக்ஸியில் அவல் சேர்த்து பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். அதில் உப்பு மற்றும் முதல் நாள் தயாரித்து வைத்த தயிர் 1 கப் சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
இது லட்டு பிடிக்கும் பதத்தில் இருக்க வேண்டும். பின் இதை இட்லி தட்டில் சேர்த்து அந்த வடிவத்திற்கு தட்டி வைக்கவும்.
பின் அதை இட்லி பாத்திரத்தில் வைத்து அப்படியே சிறிது நேரம் வைத்து எடுத்தால் சுவையான No Boil No Oil இட்லி தயார்.