OOSAI RADIO

Post

Share this post

40 வயதில் காதலரை கரம் பிடித்த நடிகை!

ஜெய்ப்பூரில் ரக்‌ஷித் கெஜ்ரிவால் என்ற தொழிலதிபரை நடிகை மீரா சோப்ரா திருமணம் செய்து கொண்டுள்ளார்.

தொடர்ந்து பல பிரபலங்களுக்கு வரிசையாக திருமணம் நடைபெற்று வருகின்றது. அண்மையில் தான் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கு திருமணம் நடைபெற்ற நிலையில், தற்போது மற்றொமொரு நடிகைக்கு திருமணம் நடந்துள்ளது.

இயக்குனர் – நடிகர் எஸ்.ஜே.சூர்யாவின் “அன்பே ஆருயிரே” படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மீரா சோப்ரா. அதனை தொடர்ந்து தெலுங்கில் பவன் கல்யாணுடன் “பங்காரம்” அர்ஜூனுடன் மருதமலை, சிம்புவுடன் காளை படத்தில் ஒரு பாடல், ஜெகன் மோகினி என வரிசையாக நடித்தார்.

ஹிந்தி மொழி படங்களிலும் நடித்த அவருக்கு பெரிய வெற்றி படங்கள் அமையவில்லை. தற்போது 40 வயதாகும் அவருக்கு நேற்று ஜெய்ப்பூரில் மிகவும் பிரமாண்டமாக திருமணம் நடந்துள்ளது. ரக்‌ஷித் கெஜ்ரிவால் என்ற தொழிலதிபருடன் மிகவும் பிரமாண்டமாக இவருக்கு திருமணம் நடந்துள்ளது.

‘சந்தோஷம், சண்டை, சிரிப்பு, அழுகை என வாழ்க்கை முழுவதுமான நினைவுகள் இப்போதிருந்து ஆரம்பித்து இருக்கிறது’ என இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் மீரா. இவருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்.

Leave a comment

Type and hit enter