பெட்ரோல், டீசல் விலை குறைப்பு தொடர்பான தகவல்!
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு அறிவிப்பு சென்னையில் வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது.
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையில் கடந்த 663 நாட்களாக எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.2 குறைப்பதாக மத்திய அரசு வியாழக்கிழமை இரவு அறிவிப்பு வெளியிட்டது.
மேலும், இந்த விலை குறைப்பு அறிவிப்பு வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவித்திருந்தது. இந்நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளிலும் இந்த விலை குறைப்பு அறிவிப்பு வெள்ளிக்கிழமை (மாா்ச் 15) அதிகாலை முதல் அமலுக்கு வந்தது. இதன்படி சென்னையில் ரூ.102.63 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு லிட்டா் பெட்ரோல், விலை குறைப்பை தொடா்ந்து ரூ.100.75 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுபோல, ரூ.94.24 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு லிட்டா் டீசல் தற்போது ரூ.92.34 க்கு விற்பனை செய்யப்படுகிறது. <
பழைய மற்றும் புதிய விலைப்பட்டியல்
பெட்ரோல் – ரூ.102.63 பழையது – ரூ.100.75 புதியது
டீசல் – ரூ.94.24 பழையது – ரூ.92.34 புதியது