பிடிக்காத உறவு – செய்து தான் ஆக வேண்டும் – விவாகரத்து குறித்து எதிர்நீச்சல் நடிகை!
சன் தொலைக்காட்சியில் மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்று எதிர்நீச்சல்.
ஈஸ்வரி, ரேணுகா, நந்தினி மற்றும் ஜனனி என்ற 4 பெண்களை மையமாக கொண்டு கதைக்களம் சென்று கொண்டிருக்கிறது.
இப்போது கதையில் குணசேகரன் தர்ஷினிக்கு திருமணம் செய்து வைப்பேன் என பிடிவாதமாக இருக்க ஈஸ்வரி இது நடக்காது என சபதம் போடுகிறார்.
அடுத்தடுத்து கதைக்களம் குணசேகரனுக்கு ஆதரவாகவே செல்ல மக்கள் கொஞ்சம் தொடர் மீது வெறுப்பை காட்டி வருகிறார்கள் என்று தான் கூற வேண்டும்.
இந்த தொடரில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ஹரிப்பிரியா.
இவர், 2012 ஆம் ஆண்டு பிரபல சீரியல் நடிகர் விக்னேஷ் குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில் திடீரென்று விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
வாழ்க்கையில் கசப்பான மனிதர்களை சந்திக்கும் சூழ்நிலை வரும், அது அனைவருக்கும் வரும் மோசமான வாழ்க்கை, பிடிக்காத உறவு என அமையும். அதை தாண்டி தான் வந்தாக வேண்டும், இனிமேலும் வரும் யாருக்கு தெரியும்.
அதை நாம் கடந்து நகர்ந்து செல்லவேண்டும், மிகுந்த மன தைரியத்தோடு நாம் இருக்க வேண்டும் என்று சூசகமாக தனது விவாகரத்து பிரச்சனை குறித்து பேசியுள்ளார்.