கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக குறைவு!
கடைகளில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக சிலிண்டரின் விலை 30 ரூபாய் 50 வரை குறைந்துள்ளது. இந்தியாவில் சர்வதேச விலை நிலவரத்துக்குத் தகுந்தபடி எண்ணெய் நிறுவனங்கள் சமையல் கேஸ் விலையை மாதத்தின் முதல் நாளில் மாற்றி வருகின்றன.
இந்த நிலையில் 19 கிலோ சிலிண்டர் விலை சென்னையில் கடந்த மாதம் 1,960 ரூபாய் ஆக இருந்தது. இந்த விலை தற்போது 30 ரூபாய் 50 வரை குறைந்து 1,930 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாக சில நாட்களுக்கு முன்பு வீட்டு உபயோக சிலிண்டரின் விலையை தலா 100 ரூபாய் குறைப்பதாக கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்திருந்தார். மகளிர் தின பரிசாகவும் இது இருக்கும் என்று பிரதமர் மோடி தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் குறைக்கப்பட்டட விலை கடந்த மாதமே அமலுக்கு வந்தது. 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை 818 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
19 கிலோ எடை கொண்ட வர்த்தக பயன்பாட்டு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதத்தின் முதல் நாளான இன்று குறைத்துள்ளன. இந்த விலை குறைப்பு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
வீட்டு உபயோக சிலிண்டரின் விலை கடந்த மாதம் தான் குறைக்கப்பட்டது என்பதால் அதன் விலை மீண்டும் குறைக்கப்படவில்லை. பழைய விலையான 818 ரூபாய் அளவிலேயே சென்னையில் சிலிண்டரின் விலை விற்கப்படுகிறது.