OOSAI RADIO

Post

Share this post

தொழில் வாய்ப்பை இழந்த 900,00 இலங்கையர்கள்!

இலங்கையில் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழிற்துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக ஒன்பது இலட்சம் பேர் தொழில்களை இழந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.

வறுமை காரணமாக சுமார் ஐந்து இலட்சம் சிறுவர், சிறுமியர் பாடசாலை கல்வியிலிருந்து இடை விலகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சிறுவர் மந்த மந்த போசனை 27 வீதம் வரையில் உயர்வடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய வங்கி அறிக்கையின் அடிப்படையில் நாட்டின் மொத்த சனத்தொகையில் 57 இலட்சம் பேர் வறுமையில் வாடுவதாக தெரிவித்துள்ளார்.

இந்த விடயங்கள் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் எவ்வித கரிசனையும் காட்டவில்லை என அவர் வருத்தம் வெளியிட்டுள்ளார்.

அரசாங்க அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் நெருக்கடி நிலைமையை கிண்டல் செய்யும் வகையில் கருத்து வெளியிட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தை மக்கள் நிறுவவில்லை எனவும் செயற்கையாக உருவாக்கப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் நடாத்துவது குறித்து ஜனாதிபதியோ அல்லது ஜனாதிபதி செயலகமோ கருத்து வெளியிட முடியாது என ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தேர்தல் குறித்த அறிவிப்புக்களை வெளியிடும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கே உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 17ம் திகதிக்கும் ஒக்ரோபர் மாதம் 17ம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment

Type and hit enter