கர்ப்பமாக இருக்கும் தீபிகாவை பிரியும் ரன்வீர்?
நடிகை தீபிகா படுகோனே தற்போது கர்ப்பமாக இருக்கின்றார்.
அடுத்தடுத்த பிளாக் பாஸ்டர் படங்களில் நடித்து வரும் பாலிவுட்டின் டாப் ஜோடியாக திகழ்ந்து வருகின்றனர் தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங். கடந்த 2018 ஆம் ஆண்டு காதலித்து திருமண பந்தத்தில் இணைந்த இவர்கள் தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வந்தனர்.
தீபிகா நடிப்பில் வெளியான பதான், ஃபைடர் போன்ற படங்கள் பாலிவுட் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன. கடந்த பிப்ரவரி மாதம் தான் இந்த ஜோடிகள் தாங்கள் பெற்றோர்கள் ஆக போவதை உறுதிசெய்தனர். இவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில், தீபிகா நடிப்பில் அடுத்ததாக “கல்கி” படம் ரிலீஸ்’க்கு தயாராகியுள்ளது.
இந்த சூழலில் தான் காட்டு தீ போல செய்தி ஒன்று பரவ துவங்கியுள்ளது. அதாவது, ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே இருவரும் விவாகரத்து பெற்றிருக்கிறார்கள் என பாலிவுட் வட்டாரங்களில் செய்திகளில் அதிகளவில் வெளியாகி வருகின்றன.
இதற்கு காரணம், நடிகர் ரன்வீர் சிங் இன்ஸ்டா பக்கத்தில் இருந்து திருமண புகைப்படங்களை நீக்கியுள்ளார். எதனால் இந்த முடிவு என்பது தெரியாத போதிலும், செய்தி காட்டு தீ போல பரவி வருகின்றது. ஆனால் வதந்திகளில் உண்மை இல்லை என்ற தகவலும் வெளிவருகின்றன.
இருவருமே தற்போது பேபிமூனில் இருக்கிறார் என்றும் அவர்களின் விடுமுறையின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.