கணவனை கொலை செய்து ஆற்றில் வீசிய பெண்!
உறங்கிக்கொண்டிருந்த கணவரைக் கொலை செய்துவிட்டு சடலத்தை கிரிபாவ ஆற்றில் வீசியதாகக் கூறப்படும் மனைவி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் கிரிபாவ பிரதேசத்தைச் சேர்ந்த உதயகுமார என்ற 32 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
33 வயதுடைய சந்தேக நபரான பெண், வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த தனது கணவரைக் கொலை செய்துவிட்டு சடலத்தை முதுகில் சுமந்து கொண்டுசென்று ஆற்றில் வீசியமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த கொலைக்கான காரணம் வெளியாகாத நிலையில், சந்தேக நபரான பெண் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிபாவ பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.