OOSAI RADIO

Post

Share this post

5 வயதுச் சிறுமியின் உயிரைப் பறித்த தொலைபேசி!

கையடக்க தொலைபேசி ஒன்றை சார்ஜ் செய்ய முயன்ற ஐந்து வயதுச் சிறுமி ஒருவர், மின்சாரம் தாக்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் களுத்துறை மக்கொனை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மக்கொனை, முங்ஹேன பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து வயதுச் சிறுமி ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

அவரது சடலம் பேருவளை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரேத பரிசோதனைக்காக களுத்துறை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பில் பயாகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a comment

Type and hit enter