OOSAI RADIO

Post

Share this post

நான்அவரை பார்த்தது கூட இல்லை!

பிரபலமான தென்னிந்திய தொலைக்காட்சி ஒன்றில் ஓடிக்கொண்டிருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட் விலகிய நிலையில் அவருக்கு பதிலாக புது நடுவராக மாதம்பட்டி ரங்கராஜ் பங்கேற்று வருகிறார்.

அவரிடம் ஊடகம் ஒன்று போட்டி எடுத்தபோது, நான் வெங்கடேஷ் பட் சாரை பார்த்தது கூட கிடையாது, அவரை பற்றியும் எனக்கு தெரியாது என மாதம்படி ரங்கராஜ் தெரிவித்துள்ளார்.

மாதம்படி ரங்கராஜுடம் தொடர்ந்து போட்டி எடுத்தபோது அவர் கூறியது,

நான் சமையல் தொழிலுக்கு திடீரென வந்துவிடவில்லை. கேட்டரிங் படித்துள்ளேன், என் அப்பா, செஃப்பிடம் கற்றுக் கொண்டு வந்தேன்.

அதுபோல் சினிமாவில் நடித்த போது கூட கூத்துப் பட்டறையில் கற்றுக் கொண்டு நடித்தேன். எங்கள் நிறுவனத்தின் செஃப் சந்தீப் என்பவரிடம் நான் மாதத்தில் இரு நாட்கள் கற்றுகொள்ள போகிறேன்.

இந்த நிகழ்ச்சியில் நான் கோமாளிகளை பார்த்தெல்லாம் பயப்படவில்லை. ரசித்தேன். 22 ஆண்டுகளாக வேலை வேலை என ஓடிக் கொண்டே இருந்தேன்.

கேட்டரிங்கில் திடீரென அதிக கூட்டம் வந்துவிடுமோ என்றெல்லாம் பயம் இருந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சி எனக்கு மனதுக்கு நிம்மதியை தருகின்றது.

வாரத்தில் ஒரு நாள் ஷூட் எப்போது வரும் என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன். புகழ் எனக்கு மிகவும் பிடிக்கும். குரேஷி டைமிங்கிற்கு போடும் காமெடி எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும். ராமர் அண்ணா, தங்கதுரையையும் பிடிக்கும். சுனிதா என்னோடு ஒரு படத்தில் நடித்துள்ளார்.

நான் இந்த நிகழ்ச்சியில் ஒப்பந்தம் ஆகும் போது இன்னொரு நடுவருக்கு பதிலாக நான் என்பதை எல்லாம் எனக்கு யாரும் சொல்லவில்லை. நானும் கேட்டுக் கொள்ளவில்லை.

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு தனித்தன்மை இருக்கும். யாரும் யாரைக்கு பதிலாகவும் இருக்க முடியாது. பட் சாரை நான் இதுவரை நேரில் சந்தித்தது கூட கிடையாது.

ஆனால் அவர் ஒரு பிரபலமான சமையல் கலைஞர் என்பது மட்டும் எனக்கு தெரியும். இருப்பினும் நாம் இந்த நிகழ்ச்சியில் எப்படி செய்யலாம் என யோசிப்பேன். மற்றபடி யாரையும் யாருடனும் ஒப்பிட மாட்டேன். நான் நானாக இருப்பேன். இவ்வாறு மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்துள்ளார்.

Leave a comment

Type and hit enter