கிரிக்கெட்டை விட்டு நீண்ட தூரம் சென்று விடுவேன்!
ஓய்வு பெற்று விட்டால் அதன் பின் கிரிக்கெட்டை விட்டு நீண்ட தூரம் சென்று விடுவேன் என இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி தெரிவித்துள்ளார்.
விளையாட்டு வீரர்களான எங்களுடைய வாழ்கையிலும் திருப்பு முனை வரும் என்பதை நாங்கள் அறிவோம். எனவே ஒரு குறிப்பிட்ட நாளில் இதை செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நான் நினைத்துக் கொண்டிருக்க விரும்பவில்லை.
ஏனெனில் நான் காலத்திற்கும் விளையாட முடியாது என்றும் குறிப்பிடார். எனவே குறையாக இருக்கும் எந்த விஷயத்தையும் செய்யாமல் விட்டுவிட்டு அதற்காக பின்னர் வருத்தப்படுவதை நான் செய்ய மாட்டேன்.
நீங்கள் என்னை கொஞ்ச காலம் பார்க்க மாட்டீர்கள். எனவே தற்போது விளையாடும் வரை என்னிடம் உள்ள அனைத்தையும் கொடுக்க விரும்புகிறேன். அதுதான் என்னை தொடர்ந்து விளையாட வைக்கிறது என்றும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி குறிப்பிட்டார்.