OOSAI RADIO

Post

Share this post

இலங்கை நடிகைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்!

சர்வதேச சஞ்சிகையான ஃபோர்ப்ஸின் 2024 ஆம் ஆண்டுக்கான, ஆசிய பிராந்திய 30 வயதுக்குட்பட்டோர் பட்டியலில்
இலங்கை நடிகை தினரா புஞ்சிஹேவா சேர்க்கப்பட்டுள்ளார்.

பொழுதுபோக்குத் துறையில், நடிகர்கள், இசைக்கலைஞர்கள், நடனக் கலைஞர்கள் உட்பட பலதரப்பட்ட திறமையாளர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

தினரா புஞ்சிஹேவா தனது சொந்த குறும்படமான மாலாவை எழுதி, நடித்து மற்றும் இயக்கியதன் மூலம் 2018 இல் வெளிப்பட்டார்.

குறித்த திரைப்படமானது 2019 சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது.

இந்தநிலையில், இலங்கை திரைப்பட தயாரிப்பாளர் பிரசன்ன விதானகேயின் நான்கு படங்களில் புஞ்சிஹேவா நடித்துள்ளார்.

மேலும், லண்டனின் குயின் மேரி பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான புஞ்சிஹேவா, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளை நாடகம் மற்றும் நடிப்புக்கு அறிமுகப்படுத்தும் இலாப நோக்கற்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

Courtesy: Sivaa Mayuri

Leave a comment

Type and hit enter