OOSAI RADIO

Post

Share this post

இலங்கையில் டைபாய்டு பாக்டீரியாவால் பரவும் அபாயம்!

இலங்கையில் டைபாய்டு பாக்டீரியா தொற்று பரவும் அபாயம் அதிகம் காணப்படுவதாகச் சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. மலக் கழிவுகளிலிருந்து இந்த டைபாய்டு பாக்டீரியாவானது உருவாகின்றது.

இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மலங்களிலிருந்து மற்றவர்களுக்குத் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதேசமயம் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களினால் தயாரிக்கப்படும் உணவுகள் மற்றும் பானங்களிலிருந்தும் இவை பரவக்கூடிய அபாயம் உள்ளது.

எனவே, பொதுமக்கள் அனைவரும் வெளி இடங்களில் தயாரிக்கப்பட்ட உணவுகளை உண்பதைத் தவிர்த்து வீடுகளில் தயாரிக்கப்பட்ட உணவுகளை உண்ணுமாறு சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த பாக்டீரியா தொற்று ஏற்பட்டால், காய்ச்சல், இதயத்துடிப்பு குறைதல், சோர்வு, இருமல், தலைவலி மற்றும் மலச்சிக்கல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தடுப்பூசிகளை இலவசமாக வழங்குவதற்குச் சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a comment

Type and hit enter