OOSAI RADIO

Post

Share this post

தோல்வியடைந்த திட்டம் – ராஜபக்ச குடும்பத்திற்கு ஏமாற்றம்!

பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்காக பசில் ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்தினர் தலைமையிலான 113 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பம் பெற மீண்டும் ஒருமுறை முயற்சித்த போதிலும், அது தோல்வியடைந்துள்ளது.

பாராளுமன்றத்தை முன்கூட்டியே கலைக்க உறுப்பினர்கள் விரும்பாததால் அது பாதியிலேயே முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த கையெழுத்து ஆவணத்தை ரணில் விக்ரமசிங்கவுடன் நடத்தும் பேச்சுவார்த்தைக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது.

பொதுஜன பெரமுன கட்சியில் இல்லாத ஐக்கிய மக்கள் சக்தி கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட ஏனைய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தென் மாகாணத்தில் உள்ள பிரபல வர்த்தகர் ஒருவருக்கு விஷேட பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்களுடன் இணக்கமாக செயற்பட்டாலும் அந்த முயற்சி முற்றாக தோல்வியடைவதாகவும் பசில் ராஜபக்சவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், முதலில் பாராளுமன்றத் தேர்தலை நடத்த அனுமதி பெற வேண்டும் என்ற நோக்கம் தோல்வியடைந்துள்ளது.

எவ்வாறாயினும், ரணில் தனது இந்தோனேஷிய விஜயத்தை முடித்தவுடன் மீண்டும் கலந்துரையாடுவதற்கு இரு தரப்பும் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Leave a comment

Type and hit enter