2 வது திருமணம் செய்த பிக்பாஸ் பிரபலம்!
பட விமர்சகராக யூடியூபில் பிரபலமானவர் அபிஷேக் ராஜா. பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக கலந்து கொண்டார். 2017ல் தீபா நடராஜன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இயக்குநராக போராடி வந்த அபிஷேக் ராஜா ‘ஜாம் ஜாம்’ என்கிற படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில், சுவாதி நாகராஜன் எனும் பத்திரிகையாளரை காதலித்து வந்த அபிஷேக் ராஜா இன்று அவரை திருமணம் செய்துக் கொண்டார்.
அதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவி பிரபலங்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் இவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.