வேலைக்கு என அழைத்து விபச்சாரம் – சிக்கிய தம்பதி!
தென்னிலங்கையில் 4 வருடங்களாக வேலை வாய்ப்பு விளம்பரங்களை செய்து பெண்களை வீட்டிற்கு அழைத்து, பாலியலில் ஈடுபடுத்திய தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நுகேகொடையில் இந்த தபதிகள் கைதாகியுள்ளனர். அங்கு செல்லும் பெண்களை அடைத்து வைத்து பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுத்தி வீடியோ எடுத்து பணத்திற்கு விற்றுள்ளதாக கூறப்படுகிறது.
நுகேகொடை சிறுவர் மற்றும் பெண்கள் குற்றத்தடுப்புப் பிரிவினரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சில தினங்களுக்கு முன்னர், அங்கிருந்து தப்பிய பதுளை மற்றும் வெலேகெதர பிரதேசங்களை சேர்ந்த இரண்டு பெண்கள் அளித்த முறைப்பாடுகளின் அடிப்படையில் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த இடத்தில் கிடைத்த ஐஸ், கஞ்சா, பல்வேறு நபர்களின் வங்கி அட்டைகள், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள், கருத்தடை சாதனங்கள், மொபைல் போன்கள், மடிக் கணினிகள் மற்றும் பல பெண்களின் தனிப்பட்ட தகவல்கள் அடங்கிய ஆவணங்களையும் போலீசார் கைப்பற்றினர்.
தேங்காய் எண்ணெய் விற்கும் இடமாகவும், பண்டிகை சாமான்களை வாடகைக்கு விடவும் இந்த வீடு இயங்கி வந்துள்ளதுடன், 20க்கும் மேற்பட்ட பெண்கள், இளம்பெண்கள் இந்த இடத்தில் பாலியலுக்காக விற்கப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.
அதோடு அதனை காணொளி எடுத்து இணையத்திஒல் விற்பனை செய்யப்பட்டதாகவும், பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்தின் மூத்த காவல் கண்காணிப்பாளர் லலித் அபேசேகர குறிப்பிட்டுள்ளார்.
கொட்டதெனியவைச் சேர்ந்த 34 வயதான பெண், குவைத்தில் சில காலமாக வேலை செய்து வந்துள்ளார். இந்த பாலியல் வலையமைப்பை நடத்திய ஆண், முகநூல் ஊடாக இந்த பெண்ணை தொடர்பு கொண்டு நட்பாகியுள்ளார்.
ஓரிரு மாதங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்த அவர், மே 18ஆம் திகதி பகோடா வீதியிலுள்ள இந்த வீட்டிற்கு வேலை தேடிச் சென்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
முகநூல் மூலம் தெரிந்த நபரின் அழைப்பின் பேரில் வேலை தேடி அங்கு சென்றிருப்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நுகேகொட, பகொட, தேவால வீதியில் அமைந்துள்ள வீட்டில் தம்மை பூட்டி வைத்து பலவிதமான பாலியல் செயல்களில் ஈடுபட வைத்து வீடியோக்களை இணையத்தில் நேரடியாக விநியோகித்ததாக இந்த இரண்டு பெண்களும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த மோசடியை நடத்திய பிரதான சந்தேகநபர் அஹங்கம பிரதேசத்தில் வசிக்கும் 46 வயதான திருமணமாகாதவர். மோசடிக்கு உடந்தையாக செயற்பட்டவர், திருமணம் செய்யாமல் அவருடன் வாழ்ந்த, காலி பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான ஒரு பிள்ளையின் தாய் எனவும் கூறப்படுகின்றது.
கைதான இருவரும் நுகேகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.