இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
தற்போது வேகமாக பரவிவரும் வைரஸ் நோயினால் கிட்டத்தட்ட ஆயிரம் பன்றிகள் உயிரிழந்துள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்ட பன்றிகளின் எண்ணிக்கை இன்னும் கணக்கிடப்படவில்லை எனவும், வட மாகாணம் தவிர்ந்த ஏனைய அனைத்து மாகாணங்களிலும் பன்றிகளுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நோய் தாக்கத்தினை கட்டுப்படுத்த கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது.
எனவே பன்றி இறைச்சி உண்பது உயிருக்கு ஆபத்தானது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தற்போதுள்ள நிலைமையைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் பன்றிப் பண்ணை உரிமையாளர்களுடன் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.