OOSAI RADIO

Post

Share this post

WhatsApp பயனாளர்களுக்கு எச்சரிக்கை!

இலங்கையின் WhatsApp கணக்குகளை ஊடுருவல் செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இலங்கையில் WhatsApp கணக்குகளுக்கு அங்கீகரிக்கப்படாத ஊடுருவல் அதிகரித்து வருவதாகவும் இணைய குற்றவாளிகள் verification codes மூலம் மக்களின் கணக்குகளை அணுகுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

WhatsApp பயனர்கள் எதிர்பாராதவிதமாக verification codeகளை பெறுவதும், சைபர் குற்றவாளிகள் தொடர்புடைய codeகளை பெறுவதற்கு நண்பர்கள் அல்லது தெரிந்தவர்கள் போல் பாவனை செய்வதும் கண்டறியப்பட்டுள்ளது.

verification codes மூலம் பயனரின் WhatsApp கணக்குகளை பெறுவதற்கு மோசடி செய்பவர்கள் வேலை செய்து வருவதாகவும், உங்கள் கணக்கிற்கு பணம் அனுப்ப தயாராக இருப்பதாகவும், அந்த codeகள் கையடக்கதொலைபேசிக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.

மேலும், Zoom ஊடாக பங்குபற்றுவதற்கான codeகள் உள்ளிடுமாறு வெளிநாட்டவர்களிடம் இருந்து பெறப்படும் செய்திகளுக்கு பதிலளிப்பதன் மூலம் இலங்கையர்கள் இந்த மோசடிகளில் அதிகம் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் நீங்கள் பெறும் OTP அல்லது குறியீடு ஒருபோதும் பகிர வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Type and hit enter