OOSAI RADIO

Post

Share this post

மரக்கறி விலைகளில் அதிரடி மாற்றம்!

சிறு போக பயிர்ச்செய்கை நிறைவடைந்து வரும் நிலையில், மரக்கறிகளின் விலை மீண்டும் உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நாட்களில், பொருளாதார மையங்களுக்கு வரும் காய்கறிகளின் இருப்பு படிப்படியாக குறைந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், மரக்கரிகளின் ஒரு கிலொகிராமிற்கான மொத்த விலைகள் பின்வருமாறு அதிகரித்துள்ளன.

போஞ்சி ரூ.350-370
கறிமிளகாய் ரூ. 480-550
கோவா ரூ.400
பச்சை மிளகாய் ரூ.330-380
பீர்க்கங்காய் ரூ.230
புடலங்காய் ரூ.220
பாகற்காய் ரூ.380
தக்காளி ரூ.180-210
வெள்ளரி ரூ.100

எனினும் மலையக மரக்கறிகளான கிழங்கு, கேரட், முட்டைகோஸ், முள்ளங்கி போன்றவற்றின் மொத்த விலை 100 ரூபாவிற்கும் குறைவாக உள்ள போதிலும் அந்த மரக்கறிகள் சில்லறை விலையில் 200 முதல் 250 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றன.

கடந்த காலங்களில் ஒரு கிலோ கரட்டின் மொத்த விற்பனை விலை 2,000 முதல் 3,000 ரூபாய் வரை அதிகரித்துள்ள நிலையில், இன்றைய நாட்களில் ஒரு கிலோ கிராமின் கரட்டின் மொத்த விலை 80 முதல் 100 ரூபாய் வரை குறைந்துள்ளது.

ஆனால் ஒரு கிலோ கிராம் கரட்டின் சில்லரை விலை 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

மரக்கறிகளின் விலையை இடைத்தரகர்கள் நிர்ணயம் செய்வதால், சில்லறை விலை அதிகரித்து வருவதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a comment

Type and hit enter