பிள்ளைகளை விட்டு காதலனுடன் சென்ற பெண்ணுக்கு வழங்கப்பட்ட தண்டனை!
யாழில் 3 பிள்ளைகளையும் கணவனையும் விட்டு பிரிந்து வேறு ஒரு ஆணுடன் தங்கியிருந்த 29 வயதுடைய பெண் ஒருவரை எதிர்வரும் 03 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியை சேர்ந்த குறித்த பெண், 04 , 06 மற்றும் 10 வயதுடைய 3 பிள்ளைகளையும், கணவனையும் விட்டு பிரிந்து, வேறு ஒரு ஆணுடன் கீரிமலை பகுதியில் அப்பெண் வசித்து வந்துள்ளார்.
அது தொடர்பில் பெண்ணின் கணவரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து, பொலிஸார் பெண்ணை கைது செய்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் முற்படுத்தினர்.
இதன்போது பெண்ணை எதிர்வரும் வரும் 03ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.