OOSAI RADIO

Post

Share this post

கடும் எச்சரிக்கை – நாட்டில் அரிசிக்கு கடும் தட்டுப்பாடு!

சந்தையில் நாட்டு அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரிசி வியாபாரிகள், நாட்டு அரிசியை சந்தைக்கு விற்பனை செய்யாமல் மறைத்து வருவதாகவும் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒரு கிலோ நாட்டு அரிசியின் விலை 220 ரூபாவாக இருந்த போதிலும், இந்த நாட்களில் நாடளாவிய ரீதியில் உள்ள பல்பொருள் அங்காடிகள் உட்பட பல கடைகளில் நாட்டு அரிசியை காணமுடியாதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாரஹேன்பிட்டி பொருளாதார நிலையத்தில் நாட்டு அரிசியை காணமுடியவில்லை எனவும், மேலும் சந்தையில் ஏனைய அரிசி வகைகளின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

சந்தையில் ஒரு கிலோ சம்பா அரிசி 230 ரூபாய் முதல் 240 ரூபாய் வரையிலும், கிரி சம்பா ஒரு கிலோ 260 ரூபாய்க்கும், பொன்னி சம்பா ஒரு கிலோ 290 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பெருந்தொகையான அரிசி வியாபாரிகள் மக்களின் பாவனைக்காக சந்தைக்கு அரிசி வழங்குவதை மட்டுப்படுத்தியுள்ளதாக அரிசி வியாபாரிகள் கூறுகின்றனர்.

அரிசி தட்டுப்பாட்டைத் தீர்க்க அரசாங்கம் விரைவான தீர்வை எடுக்காவிட்டால், எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் மக்கள் அரிசி நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அரிசி மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் எச்சரிக்கின்றனர்.

உயர் பருவ நெல் அறுவடை ஜனவரி 15 ஆம் திகதிக்கு பின்னர் மேற்கொள்ளப்படுவதால், அம்பாறை முதலான பகுதிகளில் நெல் அன்றைய தினத்திற்குப் பின்னரே மொத்த சந்தைக்கு வருமட என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Type and hit enter