விருந்தினர்களுக்கு மனைவியை விருந்தாக்கும் கணவன்கள்!
வீட்டிற்கு வரும் விருந்தினர்கள், அறிமுகம் இல்லாத நபர்களுக்கு மனைவிகளை கணவன்கள் ஒப்படைக்கும் ஓர் கிராமம் இருக்கிறது. இன்றைக்கும் இந்த பழக்கம் அந்த கிராமத்தில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதேபோன்று இன்னும் சில ஆச்சரியமான சம்பவங்கள் இந்த கிராமத்தில் நடப்பாதாக சொல்லப்படுகிறது.
உலகம் இன்று மிகவும் முன்னேறியுள்ளது. எங்கு பார்த்தாலும் உயரமான கட்டிடங்களை காண முடிகிறது. ஆனால் இந்த முன்னேற்றத்தின் பின்னால் வேறு பல முகங்களும் மறைக்கப்பட்டுள்ளன. கற்காலத்தில் மனிதர்கள் எப்படி வாழ்ந்தார்களோ, அதே வழியில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் பழங்குடியினர் பலர் உள்ளனர். இந்த பழங்குடியினரின் விதிகள் மற்றும் விதிமுறைகள் இன்னும் பழையவை. இவர்களின் பழக்கவழக்கங்களைப் பார்த்து பலரும் விலங்குகள் என்று வர்ணிக்கின்றனர். ஆனால் இந்த பழங்குடியினர் தங்கள் மரபுகளை பாதுகாத்து வருகிறார்கள் என்பதே உண்மை.
அந்த வகையில் நமிபியா நாட்டில் ஹிம்பா பழங்குடியினரின் பழக்க வழக்கங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இன்று, இந்த பழங்குடியினர் 50,OOO பேர் உள்ளனர். ஆனால் இன்றும் இந்த பழங்குடியினருக்கு சில விதிகள் உள்ளன, அதை அறிந்த பிறகு நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இந்த பழங்குடி இனத்தில் குளிப்பது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது.
நமீபியாவில் இந்தப் பழங்குடியினரில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர். அவர்களின் பழக்கவழக்கங்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்ததோ அப்படியே இருக்கின்றன. உலக முன்னேற்றம் அவர்கள் மீது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இந்தப் பழங்குடியினரில், வெளியூர்களில் இருந்து வரும் விருந்தினர்களுக்கு உணவுடன் வீட்டு பெண்களும் சேர்ந்து பரிமாறப்படுவதாக சொல்லப்படுகிறது.
ஹிம்பா பழங்குடி மக்கள் தங்களுக்கென தனியான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளைக் கொண்டுள்ளனர். பழங்குடி மக்களைப் போலவே, உணவைத் தேடி தங்கள் நாள் முழுவதும் செலவிடுகிறார்கள். ஆனால் சில விதிகள் அவர்களை விசித்திரமாக்குகின்றன. இந்த பழங்குடியினரில் குளிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. இவர்கள் தண்ணீரில் குளிப்பதற்குப் பதிலாக, புகைப் போட்டுக் குளிப்பார்கள். இது புகை குளியல் என்று அழைக்கப்படுகிறது.
இது தவிர, இந்த பழங்குடியினர் ஒரு விசித்திரமான பாரம்பரியத்தைக் கொண்டுள்ளனர். அதாவது வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு மனைவிகளை அவர்களது கணவன்கள் விருந்தளிப்பதாகவும், இதற்காக அவர்கள் வீட்டில் தனி அறை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இது அந்த கிராமம் குறித்து எடுக்கப்பட்ட ஒரு டாக்குமெண்டரியில் வெளியான தகவல் அடிப்படையில் கூறப்படுவதாகவும், சொல்லப்படுகிறது.