வரலாற்றில் அதிகூடிய வரி வருமானம் பதிவு
வரலாற்றிலேயே அதிகூடிய வரி வருமானம் 2023 ஆம் ஆண்டு பதிவாகியுள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2023 ஆம் ஆண்டு வரி வருமானம் 80% அதிகரித்துள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, வரலாற்றிலேயே அதிக வரி வருமானம் பெறப்பட்ட சந்தர்ப்பமாக இது பதிவாகியுள்ளது.
இதேவேளை, கடந்த வருடம் மொத்த வரி வருமானம் 1550.6 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டில் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தினால் பெறப்பட்ட வரி வருமானம் 861.2 பில்லியன் ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.