கனடா விசா தொடர்பில் புதிய தகவல்!
கனடாவில் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆராய்வதாக அமைச்சர் மார்க் மில்லர் அறிவித்துள்ளார்.
கனடாவில் அதிகரித்து வரும் வேலையின்மை மற்றும் வீட்டு நெருக்கடிகள் காரணமாகவே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடைமுறையானது அடுத்த மாதங்களில் இருந்து ஆரம்பமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் நிர்வாகம் எவ்வளவு குறைக்க திட்டமிட்டுள்ளது என்பதை அமைச்சர் தெரிவிக்கவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த ஆண்டின் அரையாண்டுக்குள் மாத்திரம் 3 லட்சத்துக்கும் அதிகமான தற்காலிக குடியிருப்பாளர்கள் கனடாவிற்கு வந்துள்ளனர்.
அடுத்த ஆண்டு முதல் ஆண்டு தோறும் ஐந்து லட்சம் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு நிரந்தர வதிவுரிமை வழங்க கனடிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
அரசாங்க ஊழியர்கள், இந்தக் கொள்கைகளால் வீடு வாங்கும் விலையில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து அரசாங்கத்தை எச்சரித்துள்ளனர்.
மேலும், இதனால் சர்வதேச மாணவர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் போன்ற தற்காலிக குடியிருப்பாளர்களால் வீட்டுப் பற்றாக்குறையும் அதிகரித்துள்ளது.
எனவே சர்வதேச மாணவர் வரம்பு பற்றிய அரசாங்கத்தின் திட்டம், வீட்டுப் பிரச்சனையை எளிதாக்க முயற்சிக்கிறது என வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.