OOSAI RADIO

Post

Share this post

தீவு மற்றும் 40,000 கோடி நிறுவனம் சாமியாருக்கு பரிசு?

இந்தியாவின் பாபா ராம்தேவ்-வின் 40,000 கோடி மதிப்பிலான நிறுவனத்தை தொடங்க உதவிய தம்பதி, அவருக்கு பிரித்தானியாவில் உள்ள தீவு ஒன்றையும் பரிசாக வழங்கியுள்ளார்.

இந்தியா முழுவதும் தற்போது பாபா ராம்தேவ் அவர்களின் பதஞ்சலி நிறுவனம் நன்கு அறியப்பட்ட நிறுவனமாக மாறியுள்ளது. ஆனால் இந்த நிறுவனத்தின் இன்றைய வளர்ச்சிக்கு பிரித்தானிய தம்பதி ஒருவர் அடித்தளம் அமைத்து கொடுத்துள்ளனர்.

2006ம் ஆண்டு பதஞ்சலி என்ற நிறுவனத்தை தொடங்குவதற்காக பாபா ராம்தேவ்(Baba Ramdev) மற்றும் ஆச்சார்யா பாலகிருஷ்ணா (Acharya Balkrishna) என்ற இருவரும் தனிநபர் கடன் வாங்கியுள்ளனர்.

இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், இருவருக்கும் வங்கி கணக்கு இல்லாத நிலையில், அவர்களின் பின் தொடர்பாளர்களான சுனிதா (Sunita) மற்றும் சர்வான் சாம் போடார் (Sarwan Sam Poddar) தம்பதியினரிடம் இருந்து கடன் பெற்றுள்ளனர்.

அத்துடன் 2009ம் ஆண்டு பிரித்தானியாவின் லிட்டில் கும்ப்ரே (Little Cumbrae) தீவை சுமார் 2 மில்லியன் பவுண்ட்களுக்கு வாங்கி அதை பாபா ராம்தேவ்-க்கு பரிசாக வழங்கியுள்ளார்.

2011ம் ஆண்டு அறிக்கைப்படி, சுனிதா (Sunita) மற்றும் சர்வான் சாம் போடார் (Sarwan Sam Poddar) தம்பதி ஸ்காட்லாந்தில் குடியிருந்து வருகின்றனர்.

பதஞ்சலி நிறுவனத்தில் ராம்தேவ் மற்றும் ஆச்சார்யாவின் 92 சதவீத பங்குகளுக்கு பிறகு, 7.2 சதவீத பங்குகளுடன் இரண்டாவது பெரிய பங்குதாரர்களாக சுனிதா மற்றும் சாம் போடார் உள்ளனர்.

சுனிதா வாழ்க்கையில் ராம்தேவ் யோகா முறையை பின்பற்றி உடல் எடை குறைத்த பிறகு பாபா ராம்தேவ் அவரின் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவராக உள்ளார்.

மேலும் தன்னுடைய கணவர் தீவை பரிசாக வழங்கவும், அவருக்கு பெரும் தொகை வழங்கவும் ஒப்புக் கொள்ள வைத்துள்ளார். இதனை தொடர்ந்து சுனிதா பிரித்தானியாவில் உள்ள பதஞ்சலி யோக் பீத் அறக்கட்டளையின் அறங்காவலாரானார்.

சுனிதா தற்போது ஸ்காட்லாந்தின் முன்னணி மற்றும் விருது பெற்ற வீட்டு பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு சேவை நிறுவனமான Oakminster Health Care-ன் CEO ஆக உள்ளார். பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் கடந்த வணிக ஆண்டில் 886.44 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது.

Forbes தகவல்படி இந்த நிறுவனத்தின் மொத்த நிகர மதிப்பு சுமார் 40,000 கோடி ரூபாயாகும்.

Leave a comment

Type and hit enter