வங்கிக் கணக்கு பயன்பாடு குறித்த எச்சரிக்கை!
வர்த்தக நோக்கங்களுக்காக தனிப்பட்ட வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தவோருக்கு இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் வணிகத்தில் ஈடுபடுபவர்கள் வணிகப் பரிவர்த்தனைகளுக்கு தனி வங்கிக் கணக்கைப் பயன்படுத்துவது நல்லது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தனிப்பட்ட கணக்குகள் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுவதாகவும் மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.