OOSAI RADIO

Post

Share this post

இலங்கையில் புதிய வசதி – இரவு நேரங்களில் செலுத்தலாம்!

போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராதத் தொகையை இரவு நேரத்திலும் செலுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்த தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இருப்பினும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்ட தபால கங்களில் மாத்திரம் இந்த கட்டணம் செலுத்த வசதிகள் ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

தற்போது மேல் மாகாணத்தில் இரவு நேர தபாலகங்களில் அபராதப்பணத்தை செலுத்துவதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கின்றன என திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த முயற்சி வெற்றியளித்ததையடுத்து, ஏனைய மாகாணங்களிலும் இதே நடவடிக்கைளை முன்னெடுத்துச்செல்ல திட்டமிடப்பட்டுளளது.

இம்மாத இறுதிக்கு முன்னர் இதற்கான வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படுமென தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a comment

Type and hit enter