OOSAI RADIO

Post

Share this post

கடன் தீர்க்கும் தை மாத கிருத்திகை வழிபாடு!

முருகனுக்கு உரிய வழிபாட்டு தினங்களில் கிருத்திகையும் முக்கியமான ஒரு வழிபாட்டு தினம் ஆகும்.

இந்த கிருத்திகையானது மாதந்தோறும் வந்தாலும் மூன்று கிருத்திகை மிக முக்கியமானதாக சொல்லப்படுகிறது.

அதில் ஒன்று தான் தை மாதத்தில் வரக்கூடிய தை கிருத்திகை.

முருகருக்கு விரதம் இருப்பவர்கள் ஆடி மாத தை கிருத்திகையில் விரதத்தை துவங்கி தை மாத கிருத்திகை வரை விரதம் இருப்பார்கள்.

அத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த தை கிருத்திகை தினத்தில் முருகப்பெருமானை நம்முடைய கடன்கள் அடையவும் பணவரவு அதிகரித்துக் கொள்ளவும் எப்படி வழிபாடு செய்வது என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.

கடன் தீர்ந்து பணம் வர கிருத்திகை வழிபாடு இன்றைய தினம் கிருத்திகை வழிபாடு செய்பவர்கள் எப்போதும் போல விரதம் இருந்து அவரவர் வழிபாட்டு முறைப்படி முருகப்பெருமானை வழிபாடு செய்யுங்கள்.

இன்று 20 ஆம் திகதி கண்டிப்பாக வீட்டில் கந்த சஷ்டி கவசத்தை கேட்க வேண்டும்.

அதே போல அருகில் இருக்கும் முருகர் ஆலயத்திற்கு சென்று முருகப்பெருமான் வழிபாடுகளில் கலந்து கொள்ளுங்கள்.

இது மிகப் பெரிய பலனை உங்களுக்கு தருவதாக அமையும். அதே போல் நாளை மாலை உங்கள் வீட்டு பூஜை அறையில் முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திர கோலம் போட்டு ஆறு தீபம் ஏற்றி வெவ்வரளி மாலை போட்டு முருகனை வழிபாடு செய்யுங்கள்.

இப்போது கடன் தீர்ந்து பணவரவிற்கு பூஜை நேரத்தில் இந்த மூன்று பொருட்களை ஒன்றாக வைக்க வேண்டும்.

அதற்கு ஒரு கண்ணாடி பவுலில் எடுத்துக் கொள்ளுங்கள்.

அதில் ஒரு கைப்பிடி அளவுக்கு வெள்ளை மொச்சை போட வேண்டும்.

அத்துடன் ஆறு ஏலக்காய், ஒரு துண்டு பச்சை கற்பூரம் இவற்றை வைத்து பூஜை அறையில் முருகர் படத்திற்கு முன்பாக வைத்து விடுங்கள்.

நீங்கள் வழிபாடு செய்யும் நேரத்தில் இந்த பொருட்களுக்கும் சாம்பிராணி கற்பூரம் தீபாராதனை எல்லாம் காட்டி உங்களுடைய கடன் தீர்ந்து பணவரவு அதிகரிக்க வேண்டும் என்று முருகப்பெருமானிடம் மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

இந்த வழிபாடு செய்யும் நேரத்தில் உங்களால் முடிந்த ஏதேனும் ஒரு எளிய நெய்வேத்தியத்தை செய்து வைத்து விடுங்கள்.

வழிபாடு முடிந்த பிறகு நெய்வேத்தியத்தை வீட்டில் உள்ளவர்கள் பகிர்ந்து கொடுத்து விடுங்கள்.

இந்த மொச்சை, ஏலக்காய், கற்பூரம் அனைத்தும் பூஜை அறையில் இருக்க வேண்டும்.

நீங்கள் எப்போது பூஜை செய்தாலும் இதற்கும் கற்பூர தீபாராதனை காட்டுங்கள்.

இந்தப் பொருட்கள் கெட்டு விட்டது மாற்ற வேண்டும் என்ற சமயத்தில் மட்டும் இதை மாற்றுங்கள்.

செவ்வாய்க்கிழமையில் காலை ஆறிலிருந்து ஏழு செவ்வாய் ஹோரையில் இதை மாற்றலாம்.

வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையான ஆறிலிருந்து ஏழு வரையிலான நேரத்திலும் மாற்றலாம். இப்படி மாற்றும் போது பழைய பொருட்களை கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள்.

இந்தப் பொருள் உங்கள் பூஜை அறையில் இருக்கும் போது பணவரவு அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

இதன் மூலம் எத்தனை பெரிய கடன் சுமையில் இருந்தாலும் கடன் தீரும். அத்துடன் நீங்கள் செய்யும் இந்த முருகப்பெருமான் வழிபாடானது உங்களின் சகல பிரச்சனைகளையும் தீர்க்கக் கூடிய தாக அமையும்.

இந்த வழிபாட்டு முறையை நம்பிக்கையுடன் செய்து, இந்த ஒரு எளிய பரிகார முறையை இன்றைய நாளில் துவங்குவதன் மூலம் நம்முடைய கடன் தீர்ந்து பணவரவை அதிகரித்துக் கொள்ளலாம்.

இது நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் செய்து பலன் பெறுங்கள்.

Leave a comment

Type and hit enter