OOSAI RADIO

Post

Share this post

A/L மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவர்களுக்கு தொழில்சார் வழிகாட்டல்களை வழங்கும் விசேட வேலைத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாணவர்களுக்கு தொழில்சார் வழிகாட்டல்களை வழங்கும் குறித்த வேலைத்திட்டம் எதிர்வரும் பெப்ரவரி 20 ஆம் திகதிக்கு முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதற்காக நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 300 இற்கும் மேற்பட்ட தொழில் மையங்கள் அமைக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a comment

Type and hit enter