TV பார்த்த சிறுவர்களுக்கு 12 ஆண்டுகள் சிறை!
வடகொரியாவில் தென்கொரிய தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்த சிறுவர்களுக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் கடந்த 2022 ஆம் ஆண்டு இடம்பெற்றுள்ள நிலையிலேயே இதனை பிரபல சர்வதேச ஊடகமொன்று தற்போது அம்பலப்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக குறித்த ஊடகம் பதிவிட்டுள்ள காணொளியில், சீருடை அணிந்த அதிகாரிகள் சிறுவர்களைத் தண்டிப்பதைக் காணக் கூடியதாக உள்ளது.
வடகொரியாவில் தென் கொரிய தொலைக்காட்சித் தொடர்களைப் பார்ப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும் தென் கொரிய நாடகங்களைப் பார்ப்பதற்காக, வடகொரியாவில் சிலர் கடுமையான தண்டனைகளை எதிர்கொள்ளவும் தயாராக உள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.