பணம் கொடுத்து திருமணம் செய்த அஜித்!
அஜித் தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். இவரது நடிப்பில் தற்போது விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது. மகிழ் திருமேனியுடன் முதல் முறையாக அஜித் இணைந்து இருப்பதால், இப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.
அசர்பைஜானில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் இறுதி வரை நடக்கும் என சொல்லப்படுகிறது. லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன் போன்ற நட்சத்திரங்களும் நடித்து வருகிறார்கள்.
மேலும் இப்படத்தில் நடிக்க ரூ. 105 கோடி வரை அஜித் சம்பளம் வாங்கி இருக்கிறார் என கூறப்படுகிறது. ரூ. 100 கோடிக்கும் மேல் அஜித் சம்பளம் வாங்கும் முதல் படம் இதுவே ஆகும் என்கின்றனர்.
நடிகர் அஜித் தான் காதலித்த நடிகை ஷாலினியை திருமணம் செய்துகொண்டார். கடந்த 2000ஆம் ஆண்டு இவர்களுடைய திருமணம் நடைபெற்றது. தற்போது இந்த ஜோடிக்கு மகள், மகன் உள்ளனர் என்பதை நாம் அறிவோம்.
இந்நிலையில், நடிகை ஷாலினியை திருமணம் செய்ய நடிகர் அஜித் ரூ. 1 கோடி கோடி கொடுத்தார் என தகவல் வெளியாகி இருக்கிறது. பிரபல மூத்த பத்திரிகையாளர் ஒருவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இதுகுறித்து பேசியுள்ளார்.
அப்போது, ‘ஷாலினி தந்தை பாபு, தனது மகள் ஷாலினி மற்றும் அஜித் காதலித்து வருவதை அறிந்து, அஜித்திடம் ரூ. 1 கோடி கேட்டுள்ளார். ரூ. 1 கோடி கொடுத்தால் தான் ஷாலினியுடன் திருமணம்’ என கூறியுள்ளார்.
இதற்கு அஜித் சரி என கூறிவிட்டு ரூ. 1 கோடி கொடுத்துவிட்ட பின் தான் ஷாலினியை திருமணம் செய்துகொண்டார் என அந்த மூத்த பத்திரிகையாளர் கூறியுள்ளார். இந்த விஷயம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.