பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் அமைச்சரவை வழங்கிய அங்கீகாரம்!
ஆண் சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்வதை குற்றமாக அறிவிக்கும் வகையில் தண்டனை சட்டத்தில் திருத்தம் செய்ய இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
கடந்த 24 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், குற்றவியல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள துஷ்பிரயோக சட்டங்களில் திருத்தம் செய்யவும், பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகம் தொடர்பான சட்டத்தில் உள்ள குறைபாடுகளைச் சரிசெய்யவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட சட்டமூலங்களை அரசாங்க வர்த்தமானியில் வெளியிட்டு அதன் பின் நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்குமாறு நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.