1,000 விளம்பரங்களை நீக்கிய யூடியூப்!
கூகுள் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் யூடியூப் தளத்தில் ஹாலிவுட் பிரபலங்கள் இடம்பெறும் 1000த்திற்கும் அதிகமான விளம்பரங்கள் நீக்கப்பட்டுள்ளன. அந்த விளம்பரங்கள் அனைத்தும் டீப் ஃபேக் செய்யறிவு தொழில்நுட்பத்தால் தயாரிக்கப்பட்ட போலி விளம்பரங்கள் என்பது கண்டறியப்பட்டது.
பிரபல ஹாலிவுட் நட்சத்திரங்களான டைலர் ஸ்விஃட், ஜோ ரோகன், ஸ்டீவ் ஹார்வி ஆகியோர் இடம்பெறும் போலி விளம்பரங்கள் 200 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பெருகிவரும் முறைகேடு புகார்களுக்கு இதுபோன்ற போலி விளம்பரங்கள் முக்கியமான காரணமாக உள்ளதாக யூடியூப் தெரிவித்துள்ளது. இதுபோன்ற முறைகேடான போலி விளம்பரங்களை இனம் கண்டறிந்து நீக்கும் பணியை தீவிரமாக செய்துவருவதாக யூடியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது.