OOSAI RADIO

Post

Share this post

மீண்டும் திரைக்கு வரும் பில்லா!

இயக்குநர் விஷ்னு வர்தன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான பில்லா திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் வசூலையும் குவித்தது. தொடர்ந்து, அஜித் பில்லா – 2 படத்தில் நடித்தார். ஆனால், அப்படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை.

இந்நிலையில், பில்லா திரைப்படத்தைத் தயாரிப்பு நிறுவனம் மறுவெளியீடு செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனந்தா பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படம் நடிகர் அமிதாப் பச்சன் நடித்து வெளிவந்த டான் படத்தின் தழுவல் ஆகும். டான் படத்தை நடிகர் ரஜினிகாந்த் ‘பில்லா’ என ரீமேக் செய்திருந்தார். அஜித்தின் பில்லாவும் சில மாறுதல்களுடன் வெளியானது.

Leave a comment

Type and hit enter