OOSAI RADIO

Post

Share this post

வீடு வாங்கினால் – மனைவி இலவசம்!

சீனா நாட்டில் உள்ள டிரையஜின் நகரை சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று அண்மையில் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக ஒரு விளம்பரம் செய்துள்ளது.

குறித்த விளம்பரத்தில் எங்கள் நிறுவனத்தில் வீடு வாங்கினால் உங்கள் மனைவியை இலவசமாக பெறுங்கள் என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

இந்த வசனம் நோட்டீஸ் மூலம் வெளியாகியுள்ளதை அடுத்து சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், வீடு வாங்கினால் மனைவி இலவசமா? என அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

இதனடிப்படையில் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு குறிப்பிட்ட அபராத தொகையை விதித்து அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதில், இந்த விளம்பரத்தை மக்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை.

அதாவது தங்கள் முயற்சியில் வீடு வாங்கி உங்கள் மனைவிக்கு கொடுங்கள் என்ற அர்த்தத்தில் விளம்பரம் செய்யப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a comment

Type and hit enter