OOSAI RADIO

Post

Share this post

உளவு பார்த்த 4 பேருக்கு மரண தண்டனை!

இஸ்ரேலுக்காக உளவு பாா்த்த குற்றச்சாட்டின் பேரில் ஈரானில் 4 பேருக்கு திங்கள்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இது குறித்து அந்த நாட்டு அரசுக்குச் சொந்தமான ஐஆா்என்ஏ தெரிவித்துள்ளதாவது,

இஸ்ரேல் உளவு அமைப்பான மொஸாடுக்காகப் பணியாற்றிய 4 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இஸ்ஃபஹான் நகரில் உள்ள பாதுகாப்புத் துறை தொழிற்சாலையில் கடந்த 2022-ஆம் ஆண்டு குண்டுவைத்த குற்றத்துக்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது என்று அந்தத் தொலைக்காட்சி கூறியிருந்தது.

தங்களது நாடுகளை வேவு பாா்ப்பதாக இஸ்ரேலும், ஈரானும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டி வருகின்றன. பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நாடு உருவானதை ஈரான் ஏற்கவில்லை. ஈரான் அணு ஆயுதம் உருவாக்கி வருவதாகவும், இது தங்களுக்கு ஆபத்து என்றும் இஸ்ரேல் குற்றஞ்சாட்டி வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே தொடா்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

திங்கள்கிழமை தூக்கிலிடப்பட்டவா்களின் பெயா்கள் முகமது ஃபராமா்ஸி, மோஷென் மஸ்லூம், வாஃபா ஸாா்பா், பெஜ்மன் ஃபடேஹி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, மொஸாட் உளவு அமைப்புக்காகப் பணியாற்றியதாக 5 பேருக்கு ஈரான் அதிகாரிகள் கடந்த மாதம் மரண தண்டனை நிறைவேற்றியது நினைவுகூரத்தக்கது.

Leave a comment

Type and hit enter