பல முறை பயிற்சி செய்தால் இது சாத்தியம்!
இந்தியாவுக்கு வருவதற்கு முன் ஸ்வீப் ஷாட் விளையாடுவதற்கு அதிகப்படியான பயிற்சி மேற்கொண்டதாக இங்கிலாந்து அணியின் ஆலி போப் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக விளையாடிய ஆலி போப் 196 ஓட்டங்கள் எடுத்து இங்கிலாந்து அணி சவாலான இலக்கை இந்தியாவுக்கு நிர்ணயிக்க உதவினார்.
அவர் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அதிக அளவிலான ஸ்வீப் ஷாட்டுகளை வெற்றிகரமாக விளையாடினார்.
இந்த நிலையில், இந்தியாவுக்கு வருவதற்கு முன் ஸ்வீப் ஷாட் விளையாடுவதற்கு அதிகப்படியான பயிற்சி மேற்கொண்டதாக இங்கிலாந்து அணியின் ஆலி போப் தெரிவித்துள்ளார்.