OOSAI RADIO

Post

Share this post

உலக பணக்காரர்களின் புதிய பட்டியல்!

பிரான்ஸ் தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்ட், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் ஆகியோர் உலக பணக்காரர்கள் பட்டியலில் மாறி மாறி முதல் இடம் வருகின்றனர்.

இவ்வாறான நிலையில், தற்போது பணக்காரர் பட்டியலில் கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த எலான் மஸ்க்கை, பிரான்ஸ் தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்ட் பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார்.

2023 ஆம் அண்டின் உலகின் பணக்காரர்களில் பட்டியலில் முதலிடத்தில் இருந்த எலான் மஸ்க் தற்போது இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

தற்போது பணக்காரர்களில் முதல் இடத்தில் பிரெஞ்ச் அதிபர் பெர்னார்ட் அர்னால்ட் உள்ளார்.

அர்னால்டின் சொத்து மதிப்பு 207.8 பில்லியன் டாலராகவும், எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 204.7 பில்லியன் டாலர் உள்ளது.

போர்ப்ஸ் அறிக்கைப்படி, உலகின் முதல் 10 பணக்காரர்கள்:

பெர்னார்ட் அர்னால்ட் (207.6 பில்லியன் டொலர்)

எலான் மஸ்க் (204.7 பில்லியன் டொலர்)

ஜெப் பெசோஸ் (181.3 பில்லியன் டொலர்)

லாரி எலிசன் (142.2 பில்லியன் டொலர்)

மார்க் ஜுக்கர்பெர்க் (139.1 பில்லியன் டொலர்)

வாரன் பபெட்(127.2 பில்லியன் டொலர்)

லாரி பேஜ் (127.1 பில்லியன் டொலர்)

பில் கேட்ஸ் (122.9 பில்லியன் டொலர்)

செர்ஜி பிரின் (121.7 பில்லியன் டொலர்)

ஸ்டீவ் பால்மர்(118.8 பில்லியன் டொலர்)

Leave a comment

Type and hit enter