துண்டிக்கப்பட்ட தந்தையின் தலையுடன் விடியோ!
அமெரிக்காவின் பென்சில்வேனியாவைச் சேர்ந்த இளைஞர் தந்தையைக் கொன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பக்ஸ் மாகாணத்தில் உள்ள மிடில்டவுன் குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இளைஞரின் தந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
சமூக வலைதளத்தில் வெளியான விடியோவில் மேற்குறிப்பிட்ட இளைஞர், அவரது தந்தையின் துண்டிக்கப்பட்ட தலையோடு இருந்ததாக தெரிகிறது.
32 வயதான ஜஸ்டின் மோஹ்ன் என்கிற இளைஞரைக் காவலர்கள் அவரது அலைபேசி இருப்பிடத்தின் உதவியோடு கண்டறிந்து கைது செய்தனர்.
ஆயுதங்கள் வைத்திருந்த குற்றமும் சேர்க்கப்பட்டு பிணையில் வெளிவர இயலாத வகையில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.