சிம்பு பற்றிய முக்கிய அறிவிப்பு!
நடிகர் சிம்புவின் 48-வது படத்தின் முக்கிய அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
நடிகர் சிம்புவுக்கு மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என தொடர்ந்து வெற்றிப் படங்களாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் தயாரிப்பில் சிம்பு அவரது 48-வது படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தினை தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளார்.
இந்தப் படம் ரூ.100 கோடி பட்ஜெட்டில் பான் இந்திய படமாக உருவாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது. இப்படத்தின் நிலை குறித்து எந்த அறிவிப்புகளும் வெளியாகாததால் இப்படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் பரவி வந்தது.
இந்த நிலையில், நடிகர் சிலம்பரசனின் பிறந்த நாளை முன்னிட்டு பிப். 2 ஆம் தேதி சிம்பு 48-வது படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று கமலின் ராஜ்கமல் ஃபிளிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.