பிரியங்கா குரலில் வெளியான பாடல்!
டெவில் படத்தின் புதிய பாடல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மாருதி பிலிம்ஸ், ‘டச் ஸ்கிரீன் எண்டர்டெயின்மெண்ட்’ தயாரிப்பில் உருவான திரைப்படம் டெவில். இயக்குநர் ஆதித்யா இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு இயக்குநர் மிஷ்கின் முதல்முறையாக இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் விதார்த், பூர்ணா, ஆதித் அருண், சுபா ஶ்ரீ ஆகியோருடன் இயக்குநர் மிஷ்கின் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் பணிகள் நிறைவடைந்த பின்பும் வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், டெவில் திரைப்படம் வருகிற பிப்.2 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், டெவில் படத்தில் இருந்து கடவுளுக்கு கோரிக்கை என்ற பாடல் வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இப்பாடலின் வரிகளை மிஷ்கின் எழுதியுள்ளார். விஜய் டிவி சூப்பர் சிங்கர் பிரபலம் பிரியங்கா பாடியுள்ளார்.