தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு!
தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் திறந்த மற்றும் பொறுப்புக்கூறல் அரசாங்கத்திற்கான துறைசார் மேற்பார்வைக் குழு கவனம் செலுத்தியுள்ளது.
அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் தனியார் துறை ஊழியர்களின் சம்பளப் பிரச்சினை குறித்து தீவிரமாக அவதானம் செலுத்தப்பட்டதாக குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, இந்த சம்பள அதிகரிப்பில் தொழிலாளர் அமைச்சகத்தின் தலையீடு எப்படி இருக்கும் என்பது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், தனியார் துறையில் சுமார் 3 மில்லியன் சம்பளம் பெறும் ஊழியர்கள் மட்டுமே தொழிலாளர் சட்டத்தின் கீழ் உள்ளதாக தொழிலாளர் அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன்படி, தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை 12,500 ரூபாவில் இருந்து 21,000 ரூபாவா தனியார் துறை ஊழியர்களுக்கான செய்தி க அதிகரிக்க தொழில் அமைச்சு அதிகாரிகள் முன்மொழிவொன்றை சமர்ப்பித்துள்ளனர்.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1000 ரூபாயில் இருந்து 1700 ரூபாவாக அதிகரிக்க தொழில் அமைச்சு முன்மொழிந்துள்ளதாகவும் அதிகாரிகள் குழுவிடம் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்படி, தனியார் துறை ஊழியர்களின் சேவைகளை மதிப்பீடு செய்த குழுவின் தலைவர், தொழிலாளர் அமைச்சகத்தால் முன்மொழியப்பட்ட ஊதிய உயர்வை உரிய காலத்தில் நிறைவேற்ற தேவையான பரிந்துரையை வழங்கியுள்ளார்.