அவசரகாலநிலை மேலும் 6 மாதங்கள் நீட்டிப்பு!
மியான்மரில் ராணுவ ஆட்சியைத் தொடா்வதற்கான அவசரநிலை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜனநாயக முறையில் மீண்டும் தோ்தல் நடத்துவதிலிருந்து விதிவிலக்கு அளிப்பதற்கான இந்த அவசரநிலை, வியாழக்கிழமையுடன் காலாவதியாவதைத் தொடா்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அந்த நாட்டில் ஜனநாயக முறையில் தோ்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகியின் அரசை ராணுவம் கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1 ஆம் திகதி கலைத்தது. ஆங் சான் சூகி உள்ளிட்ட அரசியல் தலைவா்கள் சிறைவைக்கப்பட்டனா்.ராணுவ ஆட்சிக்கு எதிராக வெடித்த போராட்டங்களை ராணுவம் நசுக்கியது.
இருந்தாலும், அண்மைக் காலமாக, பல்வேறு பழங்குடியின கிளா்ச்சிப் படையினா் மியான்மா் பகுதிகளைக் கைப்பற்றி வரும் சூழலில் இந்த அவசரநிலை நீட்டிப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.