பூமியை நோக்கி வரும் அபாயகரமான சிறுகோள்!
சுமார் 890 அடி விட்டம் கொண்ட அபாயகரமான சிறுகோள் ஒன்று பூமியை நோக்கி வந்துக்கொண்டிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.
2008 OS7 என்று பெயரிடப்பட்டுள்ள அந்த சிறுகோள் வெள்ளிக்கிழமை பி.ப 2.41 மணிக்கு நமது கிரகத்தை 1 770 000 மைல் தொலைவில் கடந்து செல்லும் என நாசா தெரிவித்துள்ளது.
அபாயகரமான அந்த சிறுகோள் சுமார் 890 அடி விட்டம் கொண்டதாகும். என்றாலும் அந்த சிறுகோள் பூமியின் மீது மோதும் அபாயம் இல்லை என நாசா தெரிவித்துள்ளது.