OOSAI RADIO

Post

Share this post

17 ஆயிரம் ஆதரவற்ற குழந்தைகள்!

காஸா பகுதியில் 17 ஆயிரம் குழந்தைகள் பெற்றோர்கள், உறவினர்களால் கைவிடப்பட்டுப் பிரிந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) தகவல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்தாண்டு அக்.7ல் நடத்திய திடீர் தாக்குதல் நடத்தினர். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தற்போது வரை போரிட்டு வருகின்றனர். இந்தப் போரினால் இருதரப்பிலும் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்து வருகின்றனர்.போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

இந்த நிலையில், பாலஸ்தீனத்தில் ஐ.நா குழந்தைகள் நிதியத்திற்கான தகவல் தொடர்புத் தலைவர் ஜொனாதன் கிரிக்ஸ் கூறுகையில்,

காஸாவில் சுமார் 17 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். மொத்த மக்கள் தொகையில் இது ஒரு சதவீதமாகும்.

காஸாவுக்குச் சென்ற ஐ.நா அதிகாரி, அங்கு 12 குழந்தைகளைச் சந்தித்ததாகவும், அவர்களில் மூன்று பேர் பெற்றோரை இழந்துள்ளனர். ஒவ்வொரு குழந்தைக்குப் பின்னாலும் ஒரு பயங்கரம் நிகழ்ந்துள்ளது என்று அவர் கூறினார்.

குழந்தைகள் காப்பகத்தில் உணவு, தண்ணீர், தங்குமிடம் இல்லாததால் போரில் கைவிடப்பட்ட குழந்தைகளைப் பராமரிக்க முடியாமல், பாலஸ்தீன குழந்தைகளின் மனநலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

குண்டுவெடிப்புச் சத்தத்தைக் கேட்கும் ஒவ்வொரு முறையும் அவர்கள் மிக அதிகளவில் பதட்டம் அடைகின்றனர். பசியின்மை, தூக்கமின்மை மற்றும் பீதி ஆகியவற்றால் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காஸாவில் கிட்டத்தட்ட அனைத்து குழந்தைகளுக்கும் மனநலம் மற்றும் உளவியல் ஆதரவு தேவைப்படுவதாக யுனிசெஃப் மதிப்பிட்டுள்ளது.

மனநலம் மற்றும் உளவியல் ஆதரவைப் பெறுவதற்கான ஒரே வழி போர் நிறுத்தம் மட்டுமே என்று அவர் கூறியுள்ளார்.

Leave a comment

Type and hit enter