OOSAI RADIO

Post

Share this post

உலகில் அதிக வாகன நெரிசலான நகரங்கள்!

2023ஆம் ஆண்டில் உலக அளவில் அதிக வாகன நெரிசல் இருந்த நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. முதல் 10 இடங்களில் இந்தியாவின் இரு பெருநகரங்கள் இடம்பெற்றுள்ளன.

நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாமை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டாம் டாம் (Tom Tom) என்னும் நிறுவனம் போக்குவரத்து நெரிசல் குறியீட்டை தரவரிசைப்படுத்தியுள்ளது.

அதாவது உலக அலவில் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 2023ம் ஆண்டின் தரவுகளின்படி இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதில் அதிக போக்குவரத்து நெரிசலுடன் லண்டன் நகரம் முதலிடம் பிடித்துள்ளது. இங்கு 10 கிலோ மீட்டர் பயணம் 37 நிமிடங்கள் 20 விநாடிகள் ஆகின்றனவாம்.

3வது இடத்தில் கடனாவின் ரொரன்டோ நகரம் உள்ளது. இங்கு 10 கிலோ மீட்டர் பயணிக்க 29 நிமிடங்களாகின்றன.

அதனைத் தொடர்ந்து 4வது இடத்தில் இத்தாலியின் மிலன் நகரமும், 5வது இடத்தில் பெரு நாட்டின் லிம்பா நகரமும் உள்ளன.

6வது இடத்தில் இந்தியாவின் பெங்களூரு நகரம் உள்ளது. இங்கு 10 கிலோ மீட்டர் பயணிக்க 28 நிமிடங்கள் 10 விநாடிகள் தேவைப்படுகிறதாம். 7வது இடத்தில் புணே நகரம் உள்ளது. இங்கு 10 கிலோ மீட்டர் பயணிக்க 27 நிமிடங்கள் ஆகின்றன.

போக்குவரத்து நெரிசல் குறித்த தரவுகளுக்கு 55 நாடுகளின் 387 நகரங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Leave a comment

Type and hit enter