இணையத்தில் வைரலாகும் பிக் பாஸ் நிக்சனின் புகைப்படம்!
பிக் பாஸ் நிக்சன் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த சில வாரங்களுக்கு முன் நிறைவடைந்தது.
இந்த சீசனில் கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, ரவீனா தாஹா, வினுஷா தேவி, விஷ்ணு விஜய், மாயா எஸ்.கிருஷ்ணா, விசித்திரா, யுகேந்திரன் வாசுதேவன், பவா செல்லத்துரை, மணி சந்திரா, அனன்யா உள்பட மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
மேலும், போட்டிக்கு இடையே வைல்டுகார்டு போட்டியாளர்களாக அன்னபாரதி, கானா பாலா, அர்ச்சனா, தினேஷ், ஆர்ஜே பிராவோ ஆகிய 5 பேர் களம் இறங்கினர்.
அதிகவாக்குகள் பெற்று அர்ச்சனா இப்போட்டியின் வெற்றி பெற்றார். இரண்டாம் இடத்தை மணி சந்திராவும், மூன்றாம் இடத்தை மாயாவும் பெற்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்த பிறகும் இந்நிகழ்ச்சியில் பங்கெடுத்த போட்டியாளர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுவாறே உள்ளது.
இந்த நிலையில், பிக் பாஸ் போட்டியாளர் நிக்சன், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புல்லி கேங் என ஹேஷ் இட்டு புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். தற்போது இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.